/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்
/
மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 02, 2025 05:02 AM
மதுரை : மாநில, மாவட்ட அளவிலான சிறந்த சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், நகர்ப்புற, பகுதி அளவிலான கூட்டமைப்பு, தொகுதி அளவிலானவை ஆகியவற்றை தேர்வு செய்து மணிமேகலை விருது வழங்க உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
சுய உதவி குழு துவங்கி குறைந்தபட்சம் ஓராண்டு ஆகி இருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒருமுறை வங்கிக்கடன் பெற்றிருக்க வேண்டும். கடன் தொகை தொய்வின்றி செலுத்தி இருக்க வேண்டும். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை நிர்வாகிகள் சுழற்சி முறையில் 2 ஆண்டுக்கு ஒருமுறையாவது மாற்றி இருக்க வேண்டும். சுய உதவி குழுக்கள் ஏ, பி தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 2 ஆண்டு தொய்வின்றி நடப்பது, சேமிப்பு திறன், வங்கிக் கடன் பெறுதல், உறுப்பினர்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு, வாழ்வாதார பயிற்சி வழங்கல், சமூகநல நடவடிக்கையில் பங்கேற்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
இந்தாண்டுக்கான (2024 - 25) மணிமேகலை விருதுக்கு தகுதியான சுயஉதவி குழுக்கள், சமுதாய அமைப்புகள் ஏப்.25க்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

