ADDED : ஜூன் 26, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மத்திய அரசு 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்க உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதில் கலை அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில், இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க பணிகள் ஆற்றியவர்களுக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு, பொதுத் துறையில் வேலை செய்பவர்களில், டாக்டர்கள், விஞ்ஞானிகள் தவிர மற்றவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும் விவரங்களுக்கு https://awards.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து ஜூன் 27க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.