/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
/
இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 11, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: சமுதாய சேவையில் ஈடுபடும் இளையோரின் சேவையை அங்கீகரிக்க 'முதல்வர் மாநில இளைஞர்' விருது வழங்கப்படுகிறது. விருதுக்கு 15 முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண், பெண்விண்ணப்பிக்கலாம்.
2024 ஏப். 1 - 2025 மார்ச் 31 வரையான சேவைகள் கணக்கிடப்படும். தமிழகத்தில் 5 ஆண்டுகள் குடியிருந்த சான்றிதழ் இணைக்க வேண்டும். மத்திய, மாநில அரசு, பொதுத்துறை, பல்கலை, பள்ளி, கல்லுாரிகளில் பணியாற்றுபவர்கள் விண்ணப்பிக்கக்கூடாது. விண்ணப்பத்தை www.sdat.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து மே 3க்குள் பூர்த்தி செய்ய வேண்டும். 2025க்கான விருது ஆக. 15 சுதந்திர தினவிழாவில் வழங்கப்படும்.