ADDED : நவ 20, 2024 07:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை திருப்பாலை இஸ்கான் கோயில் சார்பில் பகவத் கீதை ஜெயந்தியை முன்னிட்டு இன்று (நவ.20) முதல் டிச. 9 வரை ஆன்லைன் மூலம் பகவத் கீதை கற்கலாம்.
கோயிலின் ஆன்மிக மனிதவள மேலாளர் வம்சிதாரி தாசர் பயிற்சி அளிக்கிறார்.
அவர் கூறியதாவது: நவ.20 முதல் டிச. 9 வரை தினமும் இரவு 7:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை ஆன்லைன் மூலம் பகவத் கீதை முழுமையாக கற்றுத்தரப்படும். பங்கேற்பவர்களுக்கு பகவத் கீதை பரிசாக வழங்கப்படும். சான்றிதழ் உண்டு. எளிய தமிழில் ஆழமான விளக்கங்களுடன் கற்றுத்தரப்படும். அனுமதி இலவசம் என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்க கியூ ஆர் கோடுஐ ஸ்கேன் செய்யவும்.

