ADDED : டிச 28, 2025 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனியில் 'ரைசர் பசுமை டெவலப்மென்ட் லிட்' எனும் நிறுவனம் பொதுமக்களிடம் தங்கள் நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக வட்டி, வீட்டு மனைகள்கிடைக்கும் என அறிவித்து முதலீடு பெற்று மோசடி செய்தது.
நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன், இயக்குநர்கள் சிவக்குமார், ராமசந்திரன், சுந்தரம், ஜான் குணசீலன், ராஜா ஆகியோர்கள் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிதிநிறுவனத்தில் பணம் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் மதுரை தபால் தந்தி நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

