
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரைக்கல்லுாரி மேல்நிலைப்பள்ளியில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது. விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தலைமையாசிரியர் பாலாஜிராம் தலைமை வகித்தார். நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் நேதாஜி சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.
ஜே.சி.ஐ., மதுரை எக்ஸெல் பட்டய தலைவர் ரத்தீஷ் பாபு, மதுரை தலைவர் விஷால், முன்னாள் தலைவர் ராஜன்பாபு, நிர்வாகி நாகேஸ்வரி ராஜா, டாக்டர் கருணாகரன், வழக்கறிஞர் ஆறுமுகம், பசுமை இயக்கம் ராஜசேகர், செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொ ண்டனர். ஜே.சி.ஐ., மதுரை அமைப்பின் செயலாளர் முத்து நன்றி கூறினார்.

