/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் மயிலாடுதுறை கோர்ட் அதிரடி உத்தரவு
/
திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் மயிலாடுதுறை கோர்ட் அதிரடி உத்தரவு
திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் மயிலாடுதுறை கோர்ட் அதிரடி உத்தரவு
திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் மயிலாடுதுறை கோர்ட் அதிரடி உத்தரவு
ADDED : ஆக 02, 2024 01:11 AM
மயிலாடுதுறை, கலவர வழக்கு ஒன்றின் விசாரணைக்கு ஆஜராகாத, வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு, 2003ல் அமல்படுத்திய மதமாற்ற தடைச் சட்டத்திற்கு எதிராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மயிலாடுதுறையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
திருமாவளவன் தலைமையில், மயிலாடுதுறை எண் - 1 காமராஜர் சாலையில் இருந்து ஊர்வலம் புறப்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், வி.சி., கட்சியினர் எண் - 2 காமராஜர் சாலை வழியாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதலாக மாறியது. அதில், பொது சொத்துக்கள் சேதமடைந்தன.
இதையடுத்து, திருமாவளவன் உள்ளிட்டோர் மீது பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மயிலாடுதுறை அமர்வு நீதிமன்றத்தில், பல ஆண்டுகளாக இவ்வழக்கு நடந்து வருகிறது.
இவ்வழக்கு தொடர்பான விசாரணைக்கு, திருமாவளவன் எம்.பி., தொடர்ந்து ஆஜராகாமல் இருந்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதிலும் திருமாவளவன் ஆஜராகவில்லை.
மத்திய அரசு அமல்படுத்தியுள்ள மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, வழக்கறிஞர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, திருமாவளவன் ஆஜராக முடியவில்லை என காரணம் தெரிவித்து, கோர்ட் அனுமதி பெறும் மனுவையும், அவர் தரப்பு வழக்கறிஞர்கள் தாக்கல் செய்யவில்லை.
இதையடுத்து, திருமாவளவனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து, வழக்கு விசாரணையை, வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.
................................