/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
போலீஸ் ஏட்டு கார் ஏற்றி கொலை 6 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
/
போலீஸ் ஏட்டு கார் ஏற்றி கொலை 6 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
போலீஸ் ஏட்டு கார் ஏற்றி கொலை 6 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
போலீஸ் ஏட்டு கார் ஏற்றி கொலை 6 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு
ADDED : ஏப் 24, 2024 08:56 PM
மயிலாடுதுறை:போலீஸ் ஏட்டை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் சாராய வியாபாரிகள் 6 பேரை குற்றவாளிகள் என மயிலாடுதுறை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் போலீஸ் சரத்தில், 2012ம் ஆண்டு காரில் சாராயம் கடத்தியவர்களை, நடமாடும் சோதனை சாவடி பிரிவு சிறப்பு எஸ்.ஐ., சிங்காரம் தலைமையிலான போலீசார் கார் மற்றும் பைக்கில் விரட்டிச் சென்றனர்.
சாராயம் கடத்திச் சென்ற காரை பைக்கில் சென்ற போலீஸ் ஏட்டு ரவிச்சந்திரன், 40, மறித்து பிடிக்க முயன்றார். காரை ஓட்டி வந்த கலைச்செல்வன், 54, காரை நிறுத்தாமல் ஏட்டு ரவிச்சந்திரன் மீது மோதிவிட்டு தப்பினார். படுகாயமடைந்த ரவிச்சந்திரன் இறந்தார்.
தொடர்ந்து மீன்சுருட்டி கலைச்செல்வன், 54, கருணாகரன், 54, சங்கர், 44, ராமமூர்த்தி, 44, உள்ளிட்ட ஆறு பேர் மீது கொள்ளிடம் போலீசார் கொலை வழக்கு பதிந்து தேடி வந்தனர்.
இவ்வழக்கின் விசாரணை, மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. 21 சாட்சிகளை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, குற்றம்சாட்டப்பட்ட கலைச்செல்வன் உள்ளிட்ட ஆறு பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, வழக்கை இன்று ஒத்திவைத்தார்.

