/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
கொள்ளிடம் ஆற்றங்கரை கிராமங்களில் கலெக்டர் ஆய்வு
/
கொள்ளிடம் ஆற்றங்கரை கிராமங்களில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 02, 2024 01:48 AM

மயிலாடுதுறை :கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமங்களை கலெக்டர் பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தார்.
மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வௌியேற்றப்பட்டு வருவதால், கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஆற்றங்கரையோர கிராமமான அளக்குடி கிராமத்தில் வெள்ள தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்ட கலெக்டர் மகாபாரதி ஆற்றின் பக்கவாட்டுக் கரையின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து வெள்ளமணல், முதலைமேடுதிட்டு, நாதல்படுகை ஆகிய கொள்ளிடம் ஆற்றின் படுகை கிராம மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுருத்தினார். ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகாரித்தால், நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
தொடர்ந்து சீர்காழி வந்துள்ள மாநில பேரிடர் மீட்பு குழுவினரை கலெக்டர் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது ஆர்.டி.ஓ., அர்ச்சனா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.