/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கு 4 பேருக்கு ஆயுள், இருவருக்கு 7 ஆண்டு சிறை
/
போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கு 4 பேருக்கு ஆயுள், இருவருக்கு 7 ஆண்டு சிறை
போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கு 4 பேருக்கு ஆயுள், இருவருக்கு 7 ஆண்டு சிறை
போலீஸ்காரரை கார் ஏற்றி கொன்ற வழக்கு 4 பேருக்கு ஆயுள், இருவருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : ஏப் 25, 2024 11:39 PM

மயிலாடுதுறை: சீர்காழி அருகே போலீஸ்காரரை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் தொடர்புடைய 6 பேரில் 4 பேருக்கு ஆயுள் தண்டனையும், இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா கொள்ளிடம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2012ம் ஆண்டு, காரில் சாராயம் கடத்திச் சென்ற 4 பேரை நாகை மாவட்ட நடமாடும் சோதனை சாவடி பிரிவை சேர்ந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சிங்காரம் தலைமையிலான போலீசார் கார் மற்றும் டூவீலர்களில் விரட்டிச் சென்றனர்.
கொப்பியம் அரிகட்டி மதுகு என்ற பகுதியில் சென்றபோது சாராயம் கடத்திச் சென்ற காரை, டூ -வீலரில் சென்ற ஏட்டு ரவிச்சந்திரன்,45, வழிமறித்துள்ளார்.
மீன்சுருட்டியை சேர்ந்த டிரைவர் கலைச்செல்வன், போலீஸ்காரர் ரவிச்சந்திரன் மீது காரை மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து கொள்ளிடம் போலீசார் மீன்சுருட்டியை சேர்ந்த கலைச்செல்வன்,54, திருவிடைமருதூர் புளியம்பட்டியை சேர்ந்த கும்பகோணத்தான் என்கிற கருணாகரன்,52, மீன்சுருட்டி சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த சங்கர்,44, ராமமூர்த்தி,44, ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக கும்பகோணம் நீதிமன்றத்தில் செல்வகுமார்,42, செல்வம்,40, ஆகிய இருவர் ஆள் மாறாட்டம் செய்து ஆஜராகி உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்க பொய்யான தகவலை கூறி சரணடைந்தனர். இவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் வக்கீல் ராம சேயோன் ஆஜரானார். 21 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி விஜயகுமாரி, நேற்று வழங்கிய தீர்ப்பில், கலைச்செல்வன், கருணாகரன், சங்கர், ராமமூர்த்தி ஆகிய 4 பேருக்கும் ஏக கால ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் 4 பேருக்கும் தலா 2 ஆயிரம் அபராதமும் அதனை கட்ட தவறினால் 3 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
ஆள்மாறாட்டம் செய்த செல்வகுமார், செல்வம் ஆகிய இருவருக்கும் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்து, அதனை கட்ட தவறினால் மூன்று மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

