/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
இன்ஸ்பெக்டருக்கு 'பளார்' தந்தை, மகன் கைது
/
இன்ஸ்பெக்டருக்கு 'பளார்' தந்தை, மகன் கைது
ADDED : ஆக 19, 2024 07:05 AM
குத்தாலம்,: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ராஜகோபாலபுரம், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், 40; பில்டிங் கான்ட்ராக்டர். இவரது மகன் கிஷோர், 20; கல்லுாரி மாணவர். நேற்று முன்தினம் மாலை டூ - வீலரில் கடைக்கு வந்த கிஷோர், போக்குவரத்திற்கு இடையூறாக சாலையில் நின்றவாறு மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு ஜீப்பில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமன், கிஷோரை கண்டித்துள்ளார். கிஷோர் எதிர்த்து பேசியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கிஷோரின் மொபைல் போனை வாங்கிய இன்ஸ்பெக்டர், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறி சென்றுள்ளார்.
இதையறிந்து ஆத்திரமடைந்த மகேஸ்வரன் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், எதிர்பாராத நிலையில் இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் பளார் என அறைந்துள்ளார். இதையடுத்து, இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தடுத்து, அடித்ததாக போலீசார் வழக்கு பதிந்து, மகேஸ்வரன், கிஷோரை கைது செய்தனர்.

