/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
அந்தோணியார் ஆலயத்தில் தீச்சட்டி எடுத்து வழிபாடு
/
அந்தோணியார் ஆலயத்தில் தீச்சட்டி எடுத்து வழிபாடு
ADDED : ஜன 02, 2026 02:15 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கிறிஸ்துவ ஆலயத்தில், பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் மற்றும் தீச்சட்டி ஏந்தி வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே கஞ்சா நகரம் கிராமத்தில் பழமையான புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. 2026 புத்தாண்டு பிறப்பு தினமான நேற்று நோய் தீர வேண்டியும், திருமணம், குழந்தை வரம் வேண்டியும், மதுபழக்கத்தில் இருந்து விடுபடவும், வாழ்வு செழிக்க வேண்டியும் அந்தோணியார் ஆலயத்திற்கு எதிரே உள்ள பொதுகுளத்தில் பக்தர்கள் நீராடி அங்கிருந்து அங்கப் பிரதட்சணம் செய்தும், மண்டியிட்டு கையில் மெழுகுவர்த்தி, தீச்சட்டி ஏந்தியும் ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தனர்.
குழந்தை பேரு பெற்றவர்கள் குழந்தையை பச்சை ஓலையில் கிடத்தி கோவிலை சுற்றி இழுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து அந்தோணியார் ஆலயத்தில் சிறப்பு திருப்பலி பூஜை செய்யப்பட்டது.

