/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
தரங்கம்பாடி கோட்டையில் 17ம் நுாற்றாண்டு வாள் மாயம்
/
தரங்கம்பாடி கோட்டையில் 17ம் நுாற்றாண்டு வாள் மாயம்
தரங்கம்பாடி கோட்டையில் 17ம் நுாற்றாண்டு வாள் மாயம்
தரங்கம்பாடி கோட்டையில் 17ம் நுாற்றாண்டு வாள் மாயம்
ADDED : டிச 27, 2025 04:26 AM
மயிலாடுதுறை: தரங்கம்பாடி கோட்டையில், 17ம் நுாற்றாண்டை சேர்ந்த போர் வாள் மாயமானது.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில், 16ம் நுாற்றாண்டில் டென்மார்க் ஆட்சியாளர்களின் தலைமையகமாக திகழ்ந்த டேனிஷ் கோட்டை, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தற்போது இந்த கோட்டையில், சீரமைப்பு பணி நடைபெறுகிறது.
இந்நிலையில், கோட்டை அருங்காட்சியகத்தில், கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருந்த, 17ம் நுாற்றாண்டில் ஆட்சியாளர்கள் பயன்படுத்திய இரும்பினால் ஆன, இரண்டு போர் வாள்களில், ஒரு போர்வாள், நேற்று முன்தினம் மாயமானது. இதுகுறித்து தொல்லியல் துறை இளநிலை உதவியாளர் தினேஷ் குமார் புகாரின்படி, பொறையார் போலீசார் விசாரிக்கின்றனர். இது, வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.