/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
இரு வீடுகளில் 30 சரவன் நகை கொள்ளை மயிலாடுதுறை அருகே துணிகரம்
/
இரு வீடுகளில் 30 சரவன் நகை கொள்ளை மயிலாடுதுறை அருகே துணிகரம்
இரு வீடுகளில் 30 சரவன் நகை கொள்ளை மயிலாடுதுறை அருகே துணிகரம்
இரு வீடுகளில் 30 சரவன் நகை கொள்ளை மயிலாடுதுறை அருகே துணிகரம்
ADDED : நவ 23, 2025 02:02 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், இரு வீடுகளில் புகுந்து, 30 நாகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை டவுன்ஸ்டேஷன் ரோடு, சாரதா நகரை சேர்ந்தவர் மணிகண்டன், அவரது மனைவி விஜயா. கல்லுாரி பேராசிரியர்களான இருவரும் நேற்று முன்தினம் திருச்சிக்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. தகவலறிந்த தம்பதியர், திருச்சியில் இருந்து வந்து பார்த்தனர். அப்போது, வீட்டில் 22 சவரன் தங்க நகைகள், 1 கிலோ வெள்ளி பொருட்கள் வைத்திருந்த லாக்கரை கொள்ளையர்கள் பெயர்த்து எடுத்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம் மயிலாடுதுறை அருகே குத்தாலம் உத்ர வடக்கு வீதியைச் சேர்ந்தவர் சாய்நாதன். சென்னையில் கார்மெண்ட்ஸ் வைத்துள்ளார். இரு தினங்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் சென்னை சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சாய் நாதனின் வீட்டு கதவு திறந்து கிடந்தது.
தகவலறிந்து ஊர் திரும்பிய சாய் நாதன் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு 8 சவரன் நகைகள், ரூ 2.5 லட்சம் பணம் மற்றும் 70 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
புகாரின்பேரில் குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கோவிலில் திருட்டு இதேபோல் நேற்று முன்தினம் இரவு மயிலாடுதுறை இலுப்பைத்தோப்பு சின்ன மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் அணிந்திருந்த 5 கிராம் தங்க நகை மர்ம நபர்களால் திருடப்பட்டது.
மயிலாடுதுறை அருகே அடுத்தடுத்த கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

