/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ., சோதனை
/
மயிலாடுதுறையில் என்.ஐ.ஏ., சோதனை
ADDED : ஆக 02, 2024 02:11 AM
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் பா.ம.க., முன்னால் நகர செயலாளர் ராமலிங்கம் கடந்த 2019ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை விசாரித்து வரும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று இரு பிரிவுகளாக பிரிந்து ஒரு பிரிவினர் மயிலாடுதுறை மாவட்டம் வடகரையில் தடை செய்யப்பட்ட பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாவட்ட செயலாளர் நவாஸ்கான், தேரழந்துாரை சேர்ந்த முன்னாள் மாவட்ட தலைவர் முகமது பைசல் ஆகியோர் வீடுகளில் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டனர்.
மற்றொரு குழுவினர், குத்தாலம் அடுத்த மாந்தை கருப்பூர் கிராமத்தை சேர்ந்த நவாஸ் தீன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். முன்னதாக அவர்கள் திருவாரூர் மாவட்ட பகுதியில் உள்ள நவாஸ் தீனின் மற்றொரு முகவரிக்கு சென்றனர். அங்கு, யாரும் வசிக்காதததால், மாந்தை கருப்பூர் கிராமத்தில் உள்ள வீட்டில் சோதனை மேற்கொண்டனர். 5 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் சிம் கார்டுகள், மொபைல் போன்கள், வங்கி ஆவணங்கள், பாஸ்புக் உள்ளிட்டவற்றை என்ஐஏ. அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்றதாக கூறப்படுகிறது.
இம்மூன்று இடங்களிலும் நடைபெற்ற சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.