/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரிடம் போலீஸ் விசாரணை

ADDED : ஜூலை 23, 2024 08:27 PM

மயிலாடுதுறை:தமிழகத்தின் 38 வது புதிய மாவட்டமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது. மன்னம்பந்தல் பகுதியில் 7 மாடிகொண்ட பிரமாண்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு கடந்த மார்ச் மாதம் திறக்கப்பட்டு அலுவலகம் இயங்கி வருகிறது. 60க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலைபார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மதியம் சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதனை அடுத்து மயிலாடுதுறை போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் கலெக்டர் அலுவலகம் முழுவதும் மெட்டல் டிடைக்கடர் கருவிக்கொண்டு முழுசோதனை செய்தனர் சோதனையும் முடிவில் புரளி என்பது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடியை சேர்ந்த கணேசன்.50. என்பவர் வெடிகுண்டு இருப்பதாக போன் செய்தது தெரியவந்ததை அடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதல் கெட்ட விசாரணையில் அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.