/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறையில் பூணூல் அணியும் விழா
/
மயிலாடுதுறையில் பூணூல் அணியும் விழா
ADDED : ஆக 19, 2024 12:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஆவணி அவிட்டத்தையொட்டி கூறைநாடு காமாட்சி அம்மன் கோவிலில் இன்று நடைபெற்ற விஸ்வகர்ம சமுதாய மக்கள் பூணூல் அணியும் விழாவில், நூற்றுக்கு மேற்பட்டோர் ஓரே இடத்தில் கூடி பூணூல் மாற்றிக்கொண்டனர்.
கோவில் தக்கார் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தினர், விஸ்வகர்ம இளைஞரணி நிர்வாகிகள், கைவினைஞர்கள் தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், ஸ்ரீவிஸ்வகர்ம சமூகத்தினர் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் புதிய பூணூல் அணிந்து கொண்டனர்.