/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
ஒரு தலை காதல் விவகாரம்- பெட்ரோல் குண்டு வீச்சில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காயம்- வாலிபர் கைது

UPDATED : ஆக 01, 2024 11:15 PM
ADDED : ஆக 01, 2024 10:19 PM

சீர்காழி அருகே ஒரு தலை காதல் விவகாரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சில் பெண்ணின் தந்தையான சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்.59. திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகளை அதே பகுதியைச் சேர்ந்த கலைவேந்தன்.27. என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார்.
இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கலைவேந்தன் கணேசன் வீட்டிற்கு சென்று ரகலையில் ஈடுபட்டுள்ளார். இதனை கணேசன் கண்டித்ததால் ஆத்திரமடைந்த கலைவேந்தன் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியதில் கணேசன் படுகாயம் அடைந்தார்.
அருகில் இருந்தவர்கள் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். தொடர்ந்து கலைவேந்தனை அப்பகுதி மக்கள் பிடித்து திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து கலைவேந்தனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.