/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
அனைத்து மாவட்டங்களிலும் த.வெ.க., கொடி
/
அனைத்து மாவட்டங்களிலும் த.வெ.க., கொடி
ADDED : செப் 17, 2024 06:22 AM

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில்,தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் ஏற்றி வைத்து, கல்வெட்டை திறந்து வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கடந்த மாதம் 22ம் தேதி, சென்னை பனையூரில் அமைந்திருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியையும், கட்சியின் பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார்.தொடர்ந்து, தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கட்சி கொடி ஏற்றி வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் 5 இடங்களில் கட்சியின் கொடியை, பொதுச்செயலாளர் ஆனந்த் ஏற்றி வைத்து கல்வெட்டை திறந்து வைத்தார்.
சீர்காழி ஒன்றியம் சட்டநாதபுரம் ஊராட்சியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்து, வேட்டி, சேலை, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் ஆகியவற்றை வழங்கினார்.இந்த நிகழ்ச்சிகளில் த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

