/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
வீட்டை கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
/
வீட்டை கதவை உடைத்து நகை, பணம் திருட்டு
ADDED : செப் 03, 2024 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை : மயிலாடுதுறை அடுத்த மூவலுார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்,44; இவர் நேற்று வேலைக்கு சென்ற நிலையில், அவரது மனைவி வளர்மதி,44; மதியம் வீட்டை பூட்டிக் கொண்டு பள்ளியில் படிக்கும் தனது மகனுக்கு சாப்பாடு கொடுக்க சென்றார்.
மதியம் 1:30 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்த கிடந்தது. அதில் வைத்திருந்த 11 சவரன் நகை மற்றும் ரொக்கம் ரூ.1.10 லட்சம் பணம் திருடு போயிருந்தது. குத்தாலம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.