/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறை மின் மோட்டார்கள் மற்றும் லேப்டாப் திருடிய மூவர் கைது தப்பியோட முயன்ற இருவரின் கை முறிவு
/
மயிலாடுதுறை மின் மோட்டார்கள் மற்றும் லேப்டாப் திருடிய மூவர் கைது தப்பியோட முயன்ற இருவரின் கை முறிவு
மயிலாடுதுறை மின் மோட்டார்கள் மற்றும் லேப்டாப் திருடிய மூவர் கைது தப்பியோட முயன்ற இருவரின் கை முறிவு
மயிலாடுதுறை மின் மோட்டார்கள் மற்றும் லேப்டாப் திருடிய மூவர் கைது தப்பியோட முயன்ற இருவரின் கை முறிவு
ADDED : செப் 17, 2024 07:55 PM

சீர்காழி:சீர்காழி பகுதியில் மின்மோட்டார்கள் லேப்டாப் உள்ளிட்டவற்றை திருடிய மூவரை போலீசார் கைது செய்தனர் அப்போது தப்பி ஓட முயன்ற இருவர் கீழே விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் ஆணைக்காரன் சத்திரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாய விளை நிலங்களில் இருந்து விலை உயர்ந்த மின்மோட்டார்கள், வயர்கள், லேப்டாப்கள், கண்டென்சர்கள், இரும்பு சங்கிலிகள் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது. இது குறித்த தொடர் புகாரினை அடுத்து மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி. ஸ்டாலின் உத்தரவின் படி சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் தலைமையில் தனி பிரிவு மற்றும் தனிப்படை போலீசார் கூட்டாக இணைந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று காலை இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் தலைமையிலான தனிப்படை போலீசார் சீர்காழி புறவழிச் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த சீர்காழி கோவில்பத்து குமார் மகன் சூரிய பிரகாஷ்.23, வசந்தம் நகர் சுப்பிரமணியன் மகன் காந்திராஜன்.33, தாடாலன் கோவில் தெரு ரவி மகன் செல்லப்பா என்கிற தமிழரசன்.28. ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் மூவரும் சேர்ந்து மின் மோட்டார்கள் உள்ளிட்டவற்றை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து அம்முவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த ரூ 10 லட்சம் மதிப்புள்ள 10 மின் மோட்டார்கள், ஒரு லேப்டாப், வயர், கன்டென்சர், இரும்புச் சங்கிலி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். முன்னதாக கைது செய்யப்பட்ட மூவரில் சூரிய பிரகாஷ், தமிழரசன் ஆகிய இருவரும் போலீசாரிடமிருந்து தப்ப முயன்ற போது கீழே விழுந்து கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்த பின்னர் போலீசார் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, சிறையில் அடைத்தனர்.

