தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/ திருமண ஊர்வலத்தில் கார் புகுந்ததில் 13 பேர் காயம்

 திருமண ஊர்வலத்தில் கார் புகுந்ததில் 13 பேர் காயம்

 திருமண ஊர்வலத்தில் கார் புகுந்ததில் 13 பேர் காயம்


ADDED : ஜூலை 05, 2026 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2026 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவெண்காட்டில் நேற்று இரவு திருமண ஊர்வலம் நடந்தது. சாலை தெருவில் ஊர்வலம் சென்றபோது மேலையூர் நோக்கி வேகமாக வந்த கார், ஊர்வலத்தில் புகுந்தது. ஊர்வலத்தில் வந்தவர்கள் அலறி அடித்து ஓடினர். இந்த விபத்தில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார் உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். கிராம மக்கள், காரை அடித்து நொறுக்கியதுடன், காரை மது போதையில் ஓட்டி வந்த திருவெண்காடு ஆண்டி தோப்பு தினேஷ், 35; என்பவரை, திருவெண்காடு போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us