ADDED : ஜூலை 05, 2026 07:26 AM

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் திருமண ஊர்வலம் நடந்துள்ளது. சாலை தெருவில் ஊர்வலம் சென்று கொண்டிருந்தபோது திருவெண்காட்டில் இருந்து மேலையூர் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஊர்வலத்தின் உள்ளே புகுந்தது.
இந்த விபத்தில் திமுக ஒன்றிய செயலாளர் பஞ்சு குமார், ஹரீஷ், தமிழ்ச்செல்வன், ராஜாமணி உள்ளிட்ட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தை கண்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி மற்றும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து கிராம மக்கள் காரை துரத்தி பிடித்து அடித்து நொறுக்கியதுடன், காரை மது போதையில் ஓட்டி வந்த திருவெண்காடு ஆண்டிதோப்பு தினேஷ்.35. என்பவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து திருவெண்காடு போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
