/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
டூவீலர் ஷோரூமில் தீ விபத்து; 14 பைக் எரிந்து சேதம்
/
டூவீலர் ஷோரூமில் தீ விபத்து; 14 பைக் எரிந்து சேதம்
டூவீலர் ஷோரூமில் தீ விபத்து; 14 பைக் எரிந்து சேதம்
டூவீலர் ஷோரூமில் தீ விபத்து; 14 பைக் எரிந்து சேதம்
ADDED : நவ 09, 2024 08:32 AM
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அடுத்த ஆக்கூர் முக்கூட்டில், குத்தாலம் ராஜகோபாலபுரத்தைச் சேர்ந்த குமார்,55; என்பவர், ஹீரோ டூவீலர் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் ஷோரூமை மூடி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இரவு 11:30 மணி அளவில் டூவீலர் ஷோரூமில் திடீரென தீ பிடித்து எரிந்தது.
தகவலறிந்த பொறையார், மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் பிள்ளை பெருமாள் நல்லூர் தனியார் பவர் பிளாண்ட் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.
இருப்பினும் இந்த தீ விபத்தில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள 14 புதிய பைக்குகள் மற்றும் உதிரி பாகங்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகியது.