/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பூட்டிய வீட்டில் கொள்ளை பலே ஆசாமிகள் 3 பேர் கைது
/
பூட்டிய வீட்டில் கொள்ளை பலே ஆசாமிகள் 3 பேர் கைது
ADDED : டிச 28, 2024 05:27 AM
மயிலாடுதுறை, : மயிலாடுதுறை அருகே பூட்டிய வீட்டில் கொள்ளை அடித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த அரும்பாக்கத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் மயிலாடுதுறை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10ம் தேதி அரும்பாக்கம் வீட்டின் கதவு உடைத்து 19 சவரன் நகை திருடு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் பெரம்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் காரைக்கால்- மங்கைநல்லூர் சாலையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டபோது, அவ்வழியே வந்த காரை சோதனையிட நிறுத்தினர். உடன், காரில் இருந்த மூவரும் தப்பியோடினர்.
அப்போது, அரும்பாக்கம் தடுப்பணை பகுதியில் தடுமாறி விழுந்ததில் ஒருவருக்கு கை எலும்பு முறிந்தது. மூவரையும் போலீசார் மடக்கி பிடித்து விசாரித்ததில், அவர்கள் தென்காசி செங்கோட்டை சேர்ந்த அமீர்,31; திருவாரூர் இளமங்கலம் பிரதாப்,22; சேந்தங்குடி கரன்,22; என்பதும், மூவரும் அரும்பாக்கம் கார்த்திகேயன் வீட்டில் திருடியதும், அஜ்மீர் மீது நாகை, பேரளம், காரைக்கால், தென்காசி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேஷனில் திருட்டு மற்றும் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதுவும் தெரியவந்தது.
அவர்களிடம் இருந்து 19 சவரன் நகை, திருட்டிற்கு பயன்படுத்திய கார், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், மூவர் மீது போலீசார் வழக்கு பதிந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.