/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
ஆம்னி பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்
/
ஆம்னி பஸ் கவிழ்ந்து 30 பேர் காயம்
ADDED : டிச 27, 2025 04:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: குத்தாலம் அருகே தனியார் ஆம்னி பஸ் கவிழ்ந்த விபத்தில், பயணியர், 30 பேர் காயமடைந்தனர்.
பெங்களூரில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற ஆம்னி பஸ் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம், நாட்டாறு சட்ரஸ் அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றின் கரையோரம் இருந்த மின் கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
இதில் பஸ்சில் பயணித்த, 30 பேர் காயமடைந்தனர். பாலையூர் போலீசார் அனைவரையும் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் படுகாயமடைந்த ஆறு பேர், மேல் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீசார் வழக்கு பதிந்து, பஸ் டிரைவரை தேடுகின்றனர்.

