/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறையில் துலா உத்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடல்
/
மயிலாடுதுறையில் துலா உத்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடல்
மயிலாடுதுறையில் துலா உத்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடல்
மயிலாடுதுறையில் துலா உத்சவம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடல்
ADDED : நவ 17, 2025 01:44 AM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காவிரி ஆற்றில் நடந்த துலா உற்சவ தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்று நீராடினர்.
மயிலாடுதுறையில், ஆண்டு தோறும் ஐப்பசி 1ல் தீர்த்தவாரியுடன் துலா உற்சவம் தொடங்கி அமாவாசை தீர்த்தவாரியும், ஐப்பசி 30ல் துலா உற்சவம் கடைமுக தீர்த்தவாரி நடந்து வருகிறது. இந்த ஆண்டு துலா உற்சவ தீர்த்தவாரி, அக்., 18ல் தொடங்கியது.
நேற்று கடைமுக தீர்த்தவாரி நடந்தது. திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி, அறம்வளர்த்த நாயகி சமேத அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான படித்துறை விசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர், தெப்பக்குள காசி விஸ்வநாதர் ஆகிய சுவாமிகள், காவிரியின் தென்கரையிலும், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர், காசிவிஸ்வநாதர் சுவாமி பஞ்சமூர்ததிகளுடன் காவிரி வடக்கு கரையிலும் எழுந்தருளினர்.
காவிரி தென்கரையில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில், வடக்கு கரையில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் அஸ்திர தேவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று சுவாமி தீர்த்தம் கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் புனித நீராடி வழிபட்டனர்.
கடை முக தீர்த்தவாரியை முன்னிட்டு மாவட்ட எஸ்பி., ஸ்டாலின் தலைமையில் 280 போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், ஊர்க்காவல் படையினர், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

