/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மனித சங்கிலி போராட்டம்
/
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மனித சங்கிலி போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மனித சங்கிலி போராட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மனித சங்கிலி போராட்டம்
ADDED : நவ 14, 2024 10:09 PM

மயிலாடுதுறை:சீர்காழியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திஅங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட இணை செயலாளர் சுதா தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் கிருஷ்ணவேணி, செயலாளர் ரேவதி, பொருளாளர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் பிரபாகரன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு சீரான முன்பருவ கல்வி அளிக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். மத்திய அரசு அங்கன்வாடி திட்டத்திற்கு வழங்கக்கூடிய நிதியை குறைக்க கூடாது.
அனைத்து அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் அரசு கட்டிடத்தில் செயல்பட வேண்டும். மையத்திற்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கிட உணவு செலவுத் தொகை உயர்த்தி வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு வருடத்திற்கு இருமுறை சீருடை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில் முன்னாள் ஒன்றிய தலைவர் கலா ராணி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.