கடற்கொள்ளையர் சுட்டதில் மேலும் ஒரு மீனவர் உயிரிழப்பு
கடற்கொள்ளையர் சுட்டதில் மேலும் ஒரு மீனவர் உயிரிழப்பு
ADDED : ஆக 20, 2026 11:32 PM

மயிலாடுதுறை: சவுதி அரேபியாவில், கடற்கொள்ளையர் சுட்டதில் காயமடைந்த சீர்காழியை சேர்ந்த மேலும் ஒரு மீனவர் உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே தொடுவாய் சுனாமி நகரை சேர்ந்த மாவீரன், 40, கீழமூவர்கரை சங்கர், 40, திருமுல்லைவாசல் பால்ராஜ், கடலுார் மாவட்டம், சொத்திக்குப்பம் மணிகண்டன் ஆகிய நான்கு பேர் சவுதி அரேபியாவில் தங்கி, மீன்பிடி தொழில் செய்தனர்.
ஆக., 10ல் அங்கு மீன் பிடித்தபோது, ஈரானிய கடற்கொள்ளையர்கள் மாவீரன் உள்ளிட்டோர் சென்ற படகில் கொள்ளையடிக்க முயன்று, துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், மாவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சங்கர் பலத்த காயமடைந்தார்.
சவுதி அரேபியா கடற்படை வீரர்கள் விரைந்து, மாவீரன் உடலை கைப்பற்றி, சங்கரை கடற்படை மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை, சிகிச்சை பலனின்றி சங்கர் உயிரிழந்தார்.
