/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
/
பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
ADDED : அக் 25, 2024 02:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை:மயிலாடுதுறை பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் டி.எஸ்.பி., மனோகரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். உள்ளே இருந்த 50க் கும் மேற்பட்டவர்களில் ரூ1000க்கும் குறைவான பணம் வைத்திருந்தவர்களை வெளியில் அனுப்பி விட்டு கூடுதல் தொகை வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து சார் பதிவா ளர் உள்ளிட்ட அலுவலர்களிடம் விசாரணை நடத்தினர். அங்கு அலுவலர்களிடம் இருந்தது மற்றும் அலுவலக பதிவு அறையில் கணக்கில் வராத ரூ. 12 ஆயிரம் உட்பட, ரூ.22 ஆயிரத்து 700 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.

