பா.ஜ., மாவட்ட தலைவர் கைது மயிலாடுதுறையில் பரபரப்பு
பா.ஜ., மாவட்ட தலைவர் கைது மயிலாடுதுறையில் பரபரப்பு
ADDED : நவ 28, 2026 08:57 PM
அ நிறம் | அளவு
மயிலாடுதுறை: திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றியதை கொண்டாட மயிலாடுதுறை பஸ் ஸ்டாண்டில் கூடிய பா.ஜ., மாவட்ட தலைவர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில், உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து இன்று (நவ.,28) தீபம் ஏற்றப்பட்டது அதனை கொண்டாடும் வகையில் மயிலாடுதுறை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே பா.ஜ., மயிலாடுதுறை மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் அக்கட்சியினர் கூடினர். அப்போது, பொதுவெளியில் கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என போலீசார் அவர்களை தடுத்தனர். அதனை மீறி பட்டாசு வெடிக்க முயற்சித்த பா.ஜ., மாவட்ட தலைவர் நாஞ்சில் பாலு உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
