/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
சமையல் மாஸ்டர் வெட்டிக்கொலை பைக்கில் வந்த நபர் வெறிச்செயல் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

ADDED : ஜூன் 26, 2025 02:10 AM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே, பட்டபகலில் சமையல் மாஸ்டரை சரமாரியாக வெட்டி கொலை செய்த பைக்கில் வந்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே நீடூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் முகமது ஹாலிக், 36; சமையல் மாஸ்டர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. கருத்து வேறுபாடு காரணமாக, 4 ஆண்டாக மனைவிடம் இருந்த பிரிந்து தனியாக வசித்து வந்தார்.
இவர், நேற்று முன்தினம் மதியம் அப்பகுதியில் உள்ள மரத்தடியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் இருவர் வந்தனர். அதில் ஒருவர் பட்டாக்கத்தியால் கீழே இறங்கி, முகமது ஹாலிக்கை சரமாரியாக வெட்டினார். பின்னர், இருவரும் பைக்கில் தப்பி சென்றார்.
பலத்த காயமடைந்த முகமது ஹாலிக்கை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கும்பகோணம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நேற்று தஞ்சாவூர் அரசு மருத்துவமனை கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் முகமது ஹாலிக் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரியின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து, பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவரை தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்ய மயிலாடுதுறை டி.எஸ்.பி., பாலாஜி தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் பட்டப்பகலில், பைக்கில் வந்த நபர், முகமது ஹாலிக்கை பட்டாக்கத்தியால் வெட்டும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.