தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/கூட்டுறவு சங்க விற்பனையாளர் நேர்முக தேர்வு ஒத்தி வைப்பு

கூட்டுறவு சங்க விற்பனையாளர் நேர்முக தேர்வு ஒத்தி வைப்பு

கூட்டுறவு சங்க விற்பனையாளர் நேர்முக தேர்வு ஒத்தி வைப்பு


ADDED : நவ 26, 2024 07:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 26, 2024 07:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நாளை நடக்கவிருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் பணி இடங்களுக்கான நேர்முக தேர்வு கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 40 விற்பனையாளர் மற்றும் 5 கட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு, தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களில் விற்பனையாளர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நவ.25-ம் தேதி முதல் டிச.3-ம் தேதி வரை, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேர்காணல் நடந்து வருகிறது.

இந்நிலையில் அதி கனமழை காரணமாக நவ.27 முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெறவிருந்த நேர்முகத் தேர்வு மட்டும் ஒத்தி வைக்கப்பட்டு டிச.4-ம் தேதி (முற்பகல் மற்றும் பிற்பகல்) நடைபெற உள்ளது. மேலும் நவ.28 முதல் டிச.3 வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நேர்முகத் தேர்வில் மாற்றம் எதுவுமின்றி குறிப்பிட்டப்படி நேர்முகத் தேர்வு நடைபெறும். தொடர்புடைய விண்ணப்பத்தாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அ.தயாள விநாயகன் அமுல்ராஜ் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us