/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
/
தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ADDED : மார் 04, 2024 11:37 AM
மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் திருமடத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் மடாதிபதியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக, அவரது சகோதரர் விருதகிரி, மயிலாடுதுறை போலீசில் புகார் அளித்தார். இதில், ஆடுதுறையை சேர்ந்த வினோத், ஆதீனத்தின் நேர்முக உதவியாளர் செந்தில், சம்பாகட்டளை விக்னேஷ், செம்பனார்கோவில் தனியார் கல்வி நிறுவன தாளாளர் குடியரசு, அ.தி.மு.க.,வை சேர்ந்த செய்யூர் வக்கீல் ஜெயச்சந்திரன், தி.மு.க., ஒன்றிய செயலர் திருக்கடையூர் விஜயகுமார், பா,ஜ., மாவட்ட தலைவர் அகோரம் ஆகியோர் மீது புகார் அளித்திருந்தார்.
அதன்படி, சென்னையில் இருந்து வந்த தனிப்பிரிவு போலீசார், கடந்த 28ம் தேதி வினோத், விக்னேஷ், ஸ்ரீ நிவாஸ், குடியரசு ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடையை எஞ்சியவர்களை, போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில், தருமபுரம் ஆதீன திருமடத்திற்கு நேற்று முதல் துப்பாக்கி ஏந்திய, 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள், கடந்த மாதம் 22ம் தேதி காசி யாத்திரை சென்றுள்ளார்.

