/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்
/
ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்
ADDED : அக் 27, 2024 08:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தியை பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சட்டநாதபுரம் கிராம ஊராட்சி வரவு செலவு கணக்குகளை கஉதவி இயக்குனர் (ஊராட்சிகள்) ஆய்வு மேற்கொண்டார். அரசு விதிகளை மீறி ஊராட்சி நிதியில் செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
இதனால், திமுகவை சேர்ந்த சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தட்சிணாமூர்த்தியை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.