/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
குடிபோதை தகராறு- ரவுடியை அரிவாலால் வெட்டிய ரவுடி
/
குடிபோதை தகராறு- ரவுடியை அரிவாலால் வெட்டிய ரவுடி
ADDED : மே 24, 2024 01:21 PM
மயிலாடுதுறை: சீர்காழி அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ரவுடியை வெட்டிய வழக்கில் மற்றொரு ரவுடி உள்ளிட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா மாங்கனாம்பட்டு அருந்ததியர் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சிவா என்கிற மொட்டை சிவா.36. இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அக்பர் அலி மகன் அசரத் அலி என்பவருக்கும் இடையே நேற்று இரவு குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த அசரத் அலி சிவாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் லேசான காயமடைந்த சிவாவை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். வீட்டிற்குச் சென்ற சிவா கொள்ளிடம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிப்பதற்காக மாங்கனாம்பட்டு கடைவீதிக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு மற்றொரு நபருடன் டூவீலரில் வந்த அசரத் அலி மீண்டும் சிவாவை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிவாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு சிதம்பரம் கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளார். தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து அசரத் அலி உள்ளிட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.