ADDED : ஜூலை 31, 2025 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை:சீர்காழி அருகே முன்விரோதத்தில் முதியவரை வெட்டி கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருவாலியை சேர்ந்தவர் குணசேகரன், 75; இவரது குடும்பத்திற்கும், எதிர் வீட்டை சேர்ந்த உறவினர்களான பாலகிருஷ்ணன், 35; பாலசுப்பிரமணியன், 33; மதுரையை சேர்ந்த சுகுமாரன், 33; ஆகியோருக்கும் குடும்ப பிரச்னையில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, இரு குடும்பத்தாரும் தாக்கிக் கொண்டனர்.
குணசேகரனை எதிர் தரப்பினர் அரிவாளால் வெட்டியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தையை காப்பாற்ற சென்ற அவரது மகன் குணாசெந்தில் படுகாயமடைந்தார். திருவெண்காடு போலீசார் பாலகிருஷ்ணன், பாலசுப்ரமணியன், சுகுமாறனை கைது செய்தனர்.