/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
இலவச செயற்கைக்கால் பொருத்தும் முகாம்
/
இலவச செயற்கைக்கால் பொருத்தும் முகாம்
ADDED : அக் 08, 2025 03:43 PM
சென்னை: தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் மணிவிழா தருமபுரம் ஆதீனத்தில் நவம்பர் 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.
அதன் ஒரு பகுதியாக, நலிவடைந்தோருக்கு உதவும் வண்ணம் இலவச செயற்கைக்கால் பொருத்தும் முகாம் அக்.26ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெற உள்ளது.
இவ்வுதவி தேவைப்படுவோர் தங்களது ஆதார் அட்டை நகலுடன் கீழ்கண்ட இடங்களில் அக்டோபர் 24ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு ஆதீன தலைமை பொதுமேலாளர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
1.தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி, தருமபுரம், மயிலாடுதுறை. 2. ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, மயிலாடுதுறை. 3.ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் ஸ்ரீமுத்தையா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வைத்தீஸ்வரன்கோயில்.
4.ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி, திருக்கடவூர். 5.ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் கணபதி தேசிய நடுநிலைப்பள்ளி, குத்தாலம். 6.ஸ்ரீகுருஞானசம்பந்தர் மிஷன் வி.தி.பி நடுநிலைப்பள்ளி, தென்பாதி, சீர்காழி.