/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மயிலாடுதுறையில் கனமழை: சம்பா நெற்பயிர்கள் நாசம்; விவசாயிகள் வேதனை
/
மயிலாடுதுறையில் கனமழை: சம்பா நெற்பயிர்கள் நாசம்; விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறையில் கனமழை: சம்பா நெற்பயிர்கள் நாசம்; விவசாயிகள் வேதனை
மயிலாடுதுறையில் கனமழை: சம்பா நெற்பயிர்கள் நாசம்; விவசாயிகள் வேதனை
ADDED : ஜன 08, 2024 12:41 PM

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தொடர் மழையால் மாப்படுகை, மணலூர், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், ஆலஞ்சேரி, மருவத்தூர், தரங்கம்பாடி, நரசிங்கநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் 10 நாட்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கியது. விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விளைநிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் அவதியடைந்துள்ளனர். தரங்கம்பாடி அருகே குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்ததால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.