/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
/
குளத்தில் மூழ்கி கூலி தொழிலாளி பலி
ADDED : செப் 23, 2024 01:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவாலி வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் ரங்கராஜன்.35. இவர் கூலி தொழிலாளி. தாயார் பத்மாவதியுடன் வசித்து வருகிறார். நேற்று மதியம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், இன்று(செப்.,23) பெருங்குளத்தில் தண்ணீரில் மூழ்கி இறந்த ரங்கராஜனின் உடலை இன்று போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.