/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பொன்முடி மீது சட்ட ரீதியான நடவடிக்கை: அர்ஜுன் சம்பத்
/
பொன்முடி மீது சட்ட ரீதியான நடவடிக்கை: அர்ஜுன் சம்பத்
பொன்முடி மீது சட்ட ரீதியான நடவடிக்கை: அர்ஜுன் சம்பத்
பொன்முடி மீது சட்ட ரீதியான நடவடிக்கை: அர்ஜுன் சம்பத்
ADDED : ஏப் 18, 2025 02:08 AM

மயிலாடுதுறை:அமைச்சர் பொன்முடி மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.
இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத், 60 வயது பூர்த்தியையொட்டி, திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்தது.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியது:
மேற்கு வங்க மாநிலத்தில் இந்துக்கள் தாக்கப்படுவது, வீடுகள் கொளுத்தப்படுவது, சொந்த நாட்டிலேயே இந்துக்கள் பாதுகாப்பு இல்லாமல் அகதிகளாக வெளியே வருவது வேதனை அளிக்கிறது. இந்துக்கள் எங்கே தாக்கப்பட்டாலும் இங்கேதான் ஓடிவர வேண்டும். காஷ்மீர், வங்காளத்தில் இந்துக்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
சைவம், வைணவம் பற்றி அமைச்சர் பொன்முடி மிக மோசமாக பேசியுள்ளார். அவர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அவர் மன்னிப்பு யாருக்கு தேவை. அவர் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனி இதுபோன்று யாரும் பேசமாட்டார்கள்.
தமிழகத்தில் 2026ல் நல்ல மாற்றம் வரும். தமிழகத்தில் பழனிச்சாமி, மத்தியில் மோடி என்ற நிலையை அமைச்சர் அமித்ஷா அறிவித்து சென்றிருக்கிறார். அ.தி.மு.க., தொண்டர்கள் ஒன்றுபட்டு திராவிட மாடலை ஒழிக்க வேண்டும்.
லஞ்சம், ஊழல், சாராய மரணங்கள் இவற்றில் இருந்து மக்களை திசை திருப்ப சுயாட்சி என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். ஒருமைப்பாட்டுக்கு எதிரான இந்த தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். வக்ப் திருத்த சட்டம் நல்லது. இதனை வேண்டுமென்றே எதிர்த்து மத கலவரத்தை உருவாக்க தி.மு.க., அரசு துாண்டி விடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சஷ்டியப்த பூர்த்தி விழாவில் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன், இந்து புரட்சி முன்னணி மாவட்ட தலைவர் ஜோதிகுமரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

