தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/மனைவி, மகன் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை: சீர்காழியில் பயங்கரம்

மனைவி, மகன் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை: சீர்காழியில் பயங்கரம்

மனைவி, மகன் கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை: சீர்காழியில் பயங்கரம்


UPDATED : அக் 24, 2026 07:50 PM

ADDED : அக் 24, 2026 07:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 07:50 PM ADDED : அக் 24, 2026 07:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: குடும்ப பிரச்னையில் மனைவி, மகனை அடித்து கொலை செய்துவிட்டு, கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜலேந்திரன், 58; மீனவர். வெளிநாடு சென்று திரும்பியவர். அவரது மனைவி மலர்ச்செல்வி, 48, மகன் அதிகுணன், 23; குடும்ப பிரச்னை காரணமாக கணவன் மனைவி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரம் வீட்டின் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது மலர்ச்செல்வி, அதிகுணன் இருவரும் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். வீட்டின் அருகே உள்ள மரத்தில் ஜெலேந்திரன் துாங்கில் சடலமாக தொங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மயிலாடுதுறை எஸ்.பி., சினேகா பிரியா, சீர்காழி டி.எஸ்.பி., சரவணன் நேரில் விசாரணை நடத்தினர்.

அதில், வெளிநாடு சென்று திரும்பிய ஜலேந்திரன், வெளிநாட்டில் வேலை செய்தபோது அனுப்பி வைத்த பணத்திற்கு மனைவியிடம் கணக்கு கேட்டுள்ளார். இதனால், ஏற்பட்ட பிரச்னையில், மனைவி மலர்ச்செல்வி, மகன் அதிகுணன் இருவரையும் இரும்பு பைபால் அடித்து கொலை செய்துவிட்டு ஜலேந்திரன், தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதையடுத்து, மூவரின் உடலையும் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us