தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மயிலாடுதுறை/திருவாவடுதுறையில் 23வது திருமந்திர மாநாடு தொடக்கம்

திருவாவடுதுறையில் 23வது திருமந்திர மாநாடு தொடக்கம்

திருவாவடுதுறையில் 23வது திருமந்திர மாநாடு தொடக்கம்


UPDATED : அக் 24, 2026 12:00 AM

ADDED : அக் 23, 2026 09:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 12:00 AM ADDED : அக் 23, 2026 09:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, திருவாவடுதுறையில் கோமதீஸ்வரர் கோவில் உள்ளது. திருமந்திரம் அருளிய தலமான இங்கு, திருமூலர் தனி சன்னிதியில் அருள் பாலிக்கிறார்.

இக்கோவிலில், திருவாவடுதுறை ஆதீனம் சார்பில், 23வது திருமந்திர மாநாடு நேற்று தொடங்கி, 3 நாட்கள் நடைபெறுகிறது. மாநாட்டை முன்னிட்டு, நேற்று காலை திருமூலருக்கு அபிஷேக ஆராதனை மற்றும் புறப்பாடுடன் மாநாடு தொடங்கியது. முதலில் திருமந்திரம் பாரா யணம் செய்யப்பட்டது.

நற்செயல்



திருவாவடுதுறை ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் வேலப்ப தம்பிரான் சுவாமிகள் வரவேற்று பேசுகையில், ‘‘இளைய தலைமுறையிடம், நம் புராணங்கள், திருமுறைகள், சமய ஒழுக்க நெறிமுறைகளை கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் அவசியம்.

‘‘ஆதீனத்தின் நிர்வாகத்தின் கீழ், திருவிடைமருதுாரில் உள்ள பள்ளிகளில் திருமுறை வகுப்புகள், ஓதுவார்கள் கொண்டு தொடங்கப்பட்டுள்ளது. அதுபோல், ஒவ்வொரு பகுதிகளிலும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் இத்தகைய வகுப்புகளை செயல்படுத்த முன்வர வேண்டும்,’’ என்றார்.

திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமஹா சன்னி தானம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார் கோவில் ஆதீனம் 30-வது குருமஹா சன்னிதானம் சண்முக தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், ‘தினமலர்’ நாளிதழ் இணை ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தனர்.

திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமஹா சன்னிதானம் அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரை வழங்கி பேசியதாவது:

திருமூலர் காட்டிய வாழ்வியல் நெறிமுறைகளை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். இறைவன் தான் பேராற்றல் மிக்கவர். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும் போது தான் ஆணவம் மறையும்.

திருமூலர் காட்டக்கூடிய நான்கு தர்மங்களான எளியோரும், உயர்ந்தோரும் இறைவனை வழிபட ஒருபிடி பச்சிலையாக, சிவனுக்கு வில்வம், விநாயகருக்கு அருகம்புல் கொண்டு பூஜிப்பது, பசுவுக்கு ஒருபிடி புல் அல் லது உணவு கொடுப்பது, நாம் உணவு உண்ணும் போது அதில் இருந்து ஒரு கைப்பிடி அளவுக்கு ஏழைகளுக்கு அல்லது உயிர்களுக்கு எடுத்து வழங்குவது, மற்றவர்களிடம் பேசும் போது எப்போதும் அன்பாகவும், இனிமையாகவும் பேசுவது நற்செயல் என்கிறார் திருமூலர்.

அன்பே சிவம்



வேதம் ஓதினால் தான் மழை பெய்யும். இயற்கையை போற்ற வேண்டும். மழைநீரை சேமிக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துவது மிக முக்கியம். இதை உணர்த்தும் வகையில் அன்பே சிவம் என்கிறார் திருமூலர்.

இவ்வாறு ஆசியுரை வழங்கினார்.

ஆதீனப்புலவர் குஞ்சிதபாதம், ஆதீனம் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானமூர்த்தி ஆகியோர் மாநாட்டை தொகுத்து வழங்கினர்.

கோவில் கண்காணிப்பாளர் சண்முகம், கோவை அரண் பணி அறக்கட்டளை, மயிலாடுதுறை திருஞானசம்பந்தர் அறக்கட்டளை, புதுச்சேரி அக்சி சித்தர் யோகம் மெய் தத்துவ ஆய்வு அறக்கட்டளை நிறுவனர் அக்சி எழிலன், கோவை திருமூலர் குரு பீடம் அறக்கட்டளை நிர்வாக பொறுப்பாளர்கள், சித்தாந்த பேரறிஞர்கள், தமிழறிஞர்கள், தமிழ் புலவர்கள், சித்தாந்த பேராசிரியர்கள், ஓதுவார்கள் என, பலரும் பங்கேற்றனர்.

முதல் அமர்வில், காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லுாரி முன்னாள் முதல்வர் முருகசாமி, திருமந்திரம் பாயிரம் எனும் தலைப்பிலும், மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார், ‘அறக்கருணையும், மரக்கருணையும் திருமந்திரத்தில் இரண்டாம் தந்திரம்’ என்ற தலைப்பிலும் விளக்கமாக பேசினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us