/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மழையில் நெல் மூட்டைகள் சேதம் மயிலாடுதுறை விவசாயிகள் கவலை
/
மழையில் நெல் மூட்டைகள் சேதம் மயிலாடுதுறை விவசாயிகள் கவலை
மழையில் நெல் மூட்டைகள் சேதம் மயிலாடுதுறை விவசாயிகள் கவலை
மழையில் நெல் மூட்டைகள் சேதம் மயிலாடுதுறை விவசாயிகள் கவலை
ADDED : செப் 14, 2025 03:40 AM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டத்தில், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துஉள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில், 96,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நெல்லை கொள்முதல் செய்வதற்காக நுகர்வோர் வாணிப கழகம் மூலம் 140 இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றில், 80 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நிரந்தர கட்டடத்திலும், 60 நிலையங்கள் தற்காலிக இடத்தில் தகர கொட்டகையில் இயங்கி வருகிறது.
இரு நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்தது. இந்நிலையில், சீர்காழி தாலுகா, வைத்தீஸ்வரன் கோவில் அருகே திருப்பங்கூர் தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்ததால் விவசா யிகள் வேதனை அடைந்து உ ள்ளனர்.
தினமும் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் 800 -- 1,000 மூட்டைகள் கொள்முதல் செய்ய வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
இருப்பினும், சுமை துாக்கும் தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாகவும், விரைவாக அவற்றை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.