/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
லாரியில் இருந்து விழுந்த நெல் மூட்டைகள்:அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண்கள்:குடோனுக்கு சென்ற லாரிகள் சிறை பிடிப்பு

ADDED : செப் 20, 2024 07:44 PM

மயிலாடுதுறை:சீர்காழி அருகே குடோனுக்கு சென்ற லாரியில் இருந்து நெல் மூட்டைகள் சாலையில் விழுந்தன சத்தம் கேட்டு நகர்ந்ததால் அவ்வழியே சென்ற பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர் ஆத்திரமடைந்த மக்கள் லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா எடமணல் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நெல் சேமிப்பு கிடங்கு உள்ளது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் இங்கு சேமித்து வைக்கப்படுகிறது நேற்று வழக்கம்போல் கொள்முதல் நிலையங்களில் இருந்து குடோனுக்கு லாரிகளில் நெல் மூட்டைகள் ஏற்றி வரப்பட்டுள்ளன.
எடமணல் சஞ்சீவிராயன் கோவில் தெருவில் லாரிகள் சென்றபோது ஒரு லாரியில் மூட்டைகள் சரிவர அடுக்கி கட்டப்படாததால் அதிலிருந்து சில நெல் மூட்டைகள் சாலையில் விழுந்துள்ளன அப்போது அவ்வழியே சென்ற பெண்கள் சத்தம் கேட்டு விலகிச் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
அதே பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி கவிதா.40. என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பின்னால் வந்த லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதில் உடன்பாடு ஏற்பட்டது அடுத்து போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது