/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் கைது
/
பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் கைது
ADDED : நவ 26, 2024 01:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: ராமதாசை விமர்சித்த முதல்வரை கண்டித்து மயிலாடுதுறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
வன்னியர் சங்க மாநில செயலாளர் தங்க அய்யாசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க., மாவட்ட தலைவர் பழனிசாமி, வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்ளிட்ட பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கலந்துகொண்டனர்.
ராமதாசை விமர்சித்து பேசிய முதல்வர் ஸ்டாலினை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்