/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
விடுவிக்க லஞ்சம் கேட்ட போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
/
விடுவிக்க லஞ்சம் கேட்ட போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ADDED : பிப் 07, 2024 01:07 AM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மங்கைமடம் காந்திநகரை சேர்ந்தவர் செல்லப்பன் மகன் பிரவீன்ராஜ், 35. இவர், கடந்த 20ம் தேதி தன் பைக்கில் சட்டநாதபுரம் அருகே சென்றார். அப்போது, எதிரே வந்த மாதானம் குருவியம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த சங்கரின் பைக் நேருக்கு நேர் மோதியது.
இதுகுறித்து பிரவின்ராஜ் அளித்த புகாரின்படி, சீர்காழி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். இதை அறிந்த கூடுதல் எஸ்.பி., தலைமையிலான தனிப்படை போலீஸ்காரர் பிரபாகரன், சங்கரை தொடர்பு கொண்டு, 5,000 ரூபாய் கொடுத்தால் வழக்கில் இருந்து விடுவித்து விடுவதாக கூறினார்.
இந்த உரையாடல் ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, பிரபாகரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் பிரபாகரனை 'சஸ்பெண்ட்' செய்து எஸ்.பி., மீனா உத்தரவிட்டுள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரபாகரன், கடந்த குடியரசு தினவிழாவில் சிறப்பாக பணியாற்றியதற்கான நற்சான்றிதழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

