/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
வங்கதேச அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
வங்கதேச அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 04, 2024 12:21 PM

மயிலாடுதுறை: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், அந்நாட்டு அரசை கண்டித்தும், வங்கதேச ஹிந்து உரிமை மீட்பு குழு சார்பில் மயிலாடுதுறையில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் மற்றும் பா.ஜ., தொண்டர்கள் கிட்டப்பா அங்காடி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட பொது செயலாளர் நாஞ்சில் பாலு உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.