/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
திருக்கடையூர் கோவிலில் ரவிசங்கர் தரிசனம்
/
திருக்கடையூர் கோவிலில் ரவிசங்கர் தரிசனம்
ADDED : மே 02, 2025 01:55 AM
மயிலாடுதுறை:திருக்கடையூர் கோவிலில், வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் தரிசனம் செய்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இத்தலத்தில் சிவபெருமான் கால சம்ஹார மூர்த்தியாக எழுந்தருளி மார்க்கண்டேயருக்காக எமனை வதம் செய்ததால் அட்டவீரட்ட தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு சுவாமி அம்பாளை தரிசித்தால் நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு நேற்று வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் வந்தார். கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
70 வயதை எட்டிய ரவிசங்கர், கோவிலில் கஜ பூஜை, கோ பூஜை செய்தார். கணேஷ் குருக்கள் தலைமையில் 60 சிவாச்சாரியார்கள் வேத பாராயணம், 11 சிவாச்சாரியார்கள் மூலம் மிருத்தஞ்சய ஜெபம் மற்றும் திருமுறை பாராயணம் செய்தனர். இதில் கலந்துகொண்ட ரவிசங்கர், சுவாமி, அம்பாள், கால சம்ஹார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு வழிபாடு செய்தார்.
அவரது சகோதரி பானுமதி, சகோதரியின் கணவர் நரசிம்மன், ஜோதிடர் செல்வி, சென்னை மகாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

