/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மணல் திட்டில் சிக்கிய இரு மாடுகள் மீட்பு
/
மணல் திட்டில் சிக்கிய இரு மாடுகள் மீட்பு
ADDED : அக் 16, 2024 09:41 PM

மயிலாடுதுறை: கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு- மணல் திட்டில் சிக்கிய இரு மாடுகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ள நிலையில் சீர்காழி அருகே மணல் திட்டில் சிக்கிய இரு மாடுகளை தீயணைப்பு வீரர்கள் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள மாடுகள் அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டுகளில் மேச்சலுக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்புவது வழக்கம். இன்று காலை 50க்கும் மேற்பட்ட மாடுகள் வழக்கம் போல் ஆற்றில் இறங்கி மணல் திட்டு பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றன. கீழ் அணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்ட உபரி நீருடன், மழை நீரும் சேர்ந்து ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்த நிலையில்மணல் திட்டில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் கரைக்கு திரும்பின.
சரஸ்வதி விளாகத்தைச் சேர்ந்த அழகிரி என்பவருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் மட்டும் கரைக்கு வர முடியாமல் மணல் திட்டிலேயே சிக்கி கொண்டது. தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து வந்து கொள்ளிடம் ஆற்றில் பெருக்கெடுத்து செல்லும் தண்ணீரில் நீந்தி சென்று 2 பசு மாடுகளை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு மாடுகளை மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.